''வரத்தை சாபமாக்கிக் கொள்ளாதீர்! ''

செல்நெட் 2014

சோறு, தண்ணீர் இல்லாமல்கூட இருப்பார்கள்... செல்போன், இன்டர்நெட் இல்லாமல் இருக்க மாட்டார்கள் இன்றைய இளம்தலைமுறையினர். இந்தத் தொழில்நுட்ப சார்பு காரணமாக விளையும் நன்மைகளையும் தீமைகளையும் கல்லூரி மாணவிகள் மத்தியில் எடுத்துரைத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த அவள் விகடன் தொடங்கியிருக்கும் முயற்சி, 'செல்நெட் - 2014!’

சென்னை, அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில், ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இருநாட்கள் நடைபெற்ற 'செல்நெட் 2014’ நிகழ்ச்சியின் முதல் நாள், ரங்கோலி, கவிதை, கட்டுரை, ஓவியம், மௌன நாடகம், நடனம், ஃபேஷன் ஷோ என ஏழு பிரிவுகளில் மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டன. மறுநாள் நிகழ்வில் முதல் விருந்தினராகப் பேசிய 'சாஃப்ட் ஸ்கில்' டிரெயினர் ரேகா ஸ்ரீநிவாசன், ''வேலைக்காக கம்பெனிகளில் ஏறி இறங்கிய காலம் போய், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்து, வாய்ப்பைப் பெறும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய ஆன்லைன் வேலைகளும் வந்துவிட்டன. ஆனால், வேலை மற்றும் ஆன்லைன் வேலைகளுக்காக விண்ணப்பிக்கும்போது ஏதாவது கட்டணம் வசூலித்தால், பெரும்பாலும் அது ஏமாற்று நிறுவனம் என்பதை உணருங்கள். கல்லூரிப் படிப்பை முடித்துதான் வேலை தேடவேண்டும் என்று நினைக்காமல், படிக்கும்போதே தேடத் தொடங்குங்கள்... வசப்படுத்துங்கள்!'' என்று அக்கறையோடு சொன்னவர், வேலை தேடல் பற்றி விரிவாக பேசினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!