'எங்கள் முன்னோரும் வாழ்த்துவார்கள்... சக்தி விகடனை!’

ராமேஸ்வரம்... வாசகர் நெகிழ்ச்சி!

''நமக்கான கடமைகளில், பித்ருக்களை ஆராதித்து வணங்குவதே மிகப்பெரிய கடமை. அதை உளமாரச் செய்யும்போது, ஓர் ஆத்ம திருப்தி கிடைக்கும். அதேபோல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் என்பது மிகுந்த பலனைத் தரக்கூடியது. அதிலும், அதிகப்படியான தீர்த்தங்களில் நீராடினால் நம் பாவங்கள் அனைத்தும் தொலைந்து போகும் என்பது ஐதீகம்! எல்லாவற்றுக்கும் மேலாக, புண்ணிய தலத்துக்கு வந்து இறைவனைத் தரிசிப்பது விசேஷ பலன்களைத் தரவல்லது.

ராமபிரானே சிவனாரை வழிபட்ட புண்ணிய பூமியில், ராமநாத சுவாமியும் பர்வதவர்த்தினி அம்பாளும் கோலோச்சும் ராமேஸ்வரம் கோயிலில், எங்களை எல்லாம் அழைத்து வந்து, தீர்த்தமாடச் செய்து, தரிசனம் செய்து வைத்து, முன்னோர் தர்ப்பணத் தையும் சிறப்புறச் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து தந்த சக்தி விகடனை, நாங்கள் மட்டுமல்ல, எங்கள் முன்னோர்களும் வாழ்த்துவார்கள்!'' என்று நெக்குருகிச் சொன்னார் வாசகி அமுதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!