வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (10/04/2015)

கடைசி தொடர்பு:17:18 (15/04/2015)

தோற்றாலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் மனதை வென்ற டெல்லி வீரர்கள் !

.பி.எல். தொடரில் சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட சென்னை வந்த டெல்லி அணி வீரர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் நேரம் செலவழித்து அவர்களை மகிழ்வித்தனர்.

சென்னையில் நேற்று நடந்த ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி சென்னை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பங்கேற்க வந்த டெல்லி அணி வீரர்கள், பயிற்சி இல்லாத நேரங்களில் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கும் பள்ளிகூடங்களுக்கும் சென்றனர்.

அந்தவகையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வித்யாசாகர் மாற்றுத்திறனாளிகள் பள்ளிகூடத்துக்கு டெல்லி அணியை சேர்ந்த ஜாகீர்கான், யுவராஜ்சிங், மோர்கல் உள்ளிட்ட வீரர்கள் சென்றனர். அவர்களுடன் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் சென்றார். அந்த பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை சந்தித்த டெல்லி அணி வீரர்கள், குழந்தைகளுடன் பேசி மகிழ்ந்தனர்.

குழந்தைகளுக்கு டெல்லி அணி வீரர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட், பந்து மற்றும் ஏராளமான பரிசுப் பொருட்களையும் வழங்கினர். பின்னர் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு அங்கு வழங்கப்படும் பயிற்சி முறைகள், உணவு வகைகள் குறித்தும் கிரிக்கெட் வீரர்கள் கேட்டறிந்தனர். முடிவில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் புகைப்படமும் டெல்லி அணி வீரர்கள் எடுத்துக் கொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்