Published:Updated:

குளிர்பான மது, இன்ஸ்டா சாட்டிங்; இளம்பெண்கள், இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல்!

பெண்கள் மீது வன்முறை
News
பெண்கள் மீது வன்முறை

சமூக வலைதளங்களில் இளைஞர்களையும் குறிவைத்து சாட் செய்துள்ளார்கள். அதற்கு இந்த பெண்களை பயன்படுத்தி வாலிபர்களை அவர்கள் வசம் இழுத்துள்ளனர். இவர்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்க வைத்துவிட்டு, அப்புறம் அந்த வீடியோவை காட்டி பணத்தை பறித்து வந்தனர்.

ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், விஜயவாடாவை சேர்ந்த பெண்மணி பசராகுரு நாகசாய். இவர் அங்குள்ள படமடா மேல்நிலைப்பள்ளி அருகே துணிக்கடை வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது கடைக்கு வரும்  இளம்பெண்களிடம் பேசி பழகி வந்தார்.

பெண்கள் மீது வன்முறை
பெண்கள் மீது வன்முறை

இவரது பேச்சில் மயங்கிய பெண்களை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து அக்கறையுடன் உபசரிப்பதுண்டு. அவ்வாறு வீட்டிற்கு வந்த பெண்களிடம்  குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.

ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி விபசாரத்துக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக ஏழை பெண்களிடம் உதவி செய்வதாக கூறி அவர்களை ஏமாற்றி தனது வலையில் விழவைத்துள்ளார். பசராகுரு நாகசாய்க்கு துணையாக 2 ஆண்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.

இவர்கள் இளம்பெண்களுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளியதோடு, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இளைஞர்களையும் குறிவைத்து சாட் செய்துள்ளார்கள்..

குளிர்பான மது, இன்ஸ்டா சாட்டிங்; இளம்பெண்கள், இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல்!

அதற்கு இந்த பெண்களை பயன்படுத்தி வாலிபர்களை அவர்கள் வசம் இழுத்துள்ளனர். இவர்களை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்க வைத்துவிட்டு, பின் அந்த வீடியோவை காட்டி பணத்தை பறித்து வந்தனர். இப்படி இவரது வலையில் விழுந்த பெண்கள், சாட்டிங்கில் வந்த வாலிபர்கள் அதிகம் என்று கூறப்படுகிறது.

இப்படி இன்ஸ்டாகிராமில் பழகி லாட்ஜூக்கு வந்து இவர்களிடம் மாட்டிக்கொண்ட ஓர் இளைஞரிடம் ரூ. 2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். பயந்துபோன அந்த இளைஞர் தன்னிடம் இருந்த ரூ.1.90 லட்சத்தை கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை வாங்கிய கும்பல் அவனை விடாமல் மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்தனர். கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் உல்லாசமாக இருந்த வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.

குளிர்பான மது, இன்ஸ்டா சாட்டிங்; இளம்பெண்கள், இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் கும்பல்!

இதனால் நொந்துபோன அந்த இளைஞர் சென்ற வாரம் விஜயவாடா போலீஸ் கமிஷனரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த காவல்துறையினர், பசராகுரு நாகசாய் மற்றும் அவருடன் இருந்தவரை கடந்த 23-ம் தேதி கைது செய்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரையும் காவல்துறை தேடி வருகிறது.  

இவர்கள் எத்தனை பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளினர்,  எத்தனை வாலிபர்களை மிரட்டி எவ்வளவு பணம் பறித்தனர், இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் யார் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.