Published:Updated:

ஓடும் வேனில் பாய்ந்த மின்சாரம்; 10 பேர் பலி; சிகிச்சையில் 14 பேர் - மேற்கு வங்கத்தில் பரிதாபம்

மரணம்

ஓடும் வாகனத்தில் மின்சாரம் தாக்கி 10 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் வேனில் பாய்ந்த மின்சாரம்; 10 பேர் பலி; சிகிச்சையில் 14 பேர் - மேற்கு வங்கத்தில் பரிதாபம்

ஓடும் வாகனத்தில் மின்சாரம் தாக்கி 10 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
மரணம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கு வங்க மாநிலம், கூச் பெஹார் மாவட்டத்திலிருந்து ஜல்பைகுரிக்கு 37 பயணிகளுடன் வேன் ஒன்று சென்றிருக்கிறது. இதில் பயணித்தவர்கள் ஜல்பைகுரியில் உள்ள ஜல்பேஷ் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்ததாகத் தெரியவந்திருக்கிறது. பயணிகள் வேன் ஜல்பைகுரி மாவட்டத்திலுள்ள மைனகுரி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தகவலறிந்த மேற்கு வங்க காவல்துறை, மீட்புக்குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டது. இந்த விபத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். 14 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி
ட்விட்டர்

மின்சாரம் தாக்கி விபத்துக்குள்ளானது தொடர்பாக காவல்துறை தரப்பு கூறுகையில், "கடும் மழையின் காரணமாக ஜெனரேட்டரின் வயரிங் அமைப்பு ஷார்ட் சர்க்யூட் காரணமாக பிக்கப் வேன் மீது மின்சாரம் தாக்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைப்பெற்றுவருகிறது" எனத் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜல்பேஷ் கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 10 சிதல்குச்சி, கூச்பெஹார் யாத்ரீகர்களின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். சம்பவ இடத்துக்கு அமைச்சர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார். மீட்பு, உதவி, சிகிச்சைக்காக முழு நிர்வாகத்தையும் திரட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. விபத்துக்குக் காரணமானவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனப் பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!