Published:Updated:

தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் தீ பரவியதற்கு பட்டாசுகளே காரணம்: தடயவியல் நிபுணர்கள்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் தீ பரவியதற்கு பட்டாசுகளே காரணம்: தடயவியல் நிபுணர்கள்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் தீ பரவியதற்கு பட்டாசுகளே காரணம்: தடயவியல் நிபுணர்கள்

ஹைதராபாத்: கடந்த மாதம் 30 ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வந்த தமிழ்நாடு  எக்ஸ்பிரஸ் ரயிலில் பட்டாசுகள் இருந்ததே, தீ வேகமாகப் பரவக் காரணமாக  இருந்துள்ளது என்று தடயவியல் நிபுணர்கள் அளித்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில், கடந்த  மாதம் 30-ம் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது தீப்பிடித்தது.இதனால்  எஸ்-11 பெட்டியில் இருந்த 32 பயணிகள் உயிரிழந்தனர்;25 பேர் காயமடைந்தனர்.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸில் தீ பரவியதற்கு பட்டாசுகளே காரணம்: தடயவியல் நிபுணர்கள்

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதலில் கூறப்பட்டது.ஆனால் தீ  பிடித்தபோது வெடிச்சத்தம் கேட்டதாக காயமடைந்த பயணி ஒருவர் கூறினார்.
 

##~~##
இதனால் ரெயிலுக்குள் வெடிபொருட்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.  இதற்கிடையே தீப்பிடித்து கருகிய ரயில் பெட்டிக்குள் சேகரித்த பொருட்களை ஆந்திர  பிரதேச தடய அறிவியல் ஆய்வுக்கூட நிபுணர்கள் ஆய்வு செய்து வந்தனர்.
 
இந்த ஆய்வறிக்கை ரயில்வே நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.அதன் நகல் ரயில்வே  பாதுகாப்பு கமிஷனருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
தீப்பிடித்த எஸ்-11 பெட்டிக்குள் பட்டாசுகள் இருந்ததாக அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.குறைந்தது 6 இருக்கைகளுக்கு அடியில் பட்டாசுகள்  வைக்கப்பட்டிருக்கலாம்.இதனால்தான் தீ வேகமாக பரவியுள்ளது.ஆனால் முதலில் தீ  பிடித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று தடயவியல் அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.