Published:Updated:

பட்டாசு ஆலை வெடிவிபத்து: 6 பேர் கைது

பட்டாசு ஆலை வெடிவிபத்து: 6 பேர் கைது
பட்டாசு ஆலை வெடிவிபத்து: 6 பேர் கைது

சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக 6 பேர் கைது  செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி என்ற இடத்தில் தனியார் பட்டாசு ஆலையில் நேற்று  ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர்.

பட்டாசு ஆலை வெடிவிபத்து: 6 பேர் கைது

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக போர்மேன் உதயகுமார், பால்பாண்டி,  பாண்டிதுரை, அண்ணாத்துரை, ஸ்ரீகாந்த், உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது  செய்துள்ளனர்.இவர்கள் மீது  இந்திய தண்டனை சட்டம் மற்றும் இந்திய வெடி பொருள்  சட்டம் 286, 304, 338, 337, டபிள்யூ 9(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது.

ஆலை உரிமையாளர் முருகேசன் உள்ளிட்ட 7 பேர் த‌லை‌மறைவாக உள்ளனர்.அவர்களை  பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.