Published:Updated:

சிவகாசி வெடி விபத்து: பட்டாசு ஆலை அதிபர் கைது!

Vikatan Correspondent
சிவகாசி வெடி விபத்து: பட்டாசு ஆலை அதிபர் கைது!
சிவகாசி வெடி விபத்து: பட்டாசு ஆலை அதிபர் கைது!
சிவகாசி வெடி விபத்து: பட்டாசு ஆலை அதிபர் கைது!

விருதுநகர்: சிவகாசி அருகே 38 பேரை பலி கொண்ட முதலிபட்டி பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை அதிபர் மதுரை அருகே கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசி அருகே உள்ள முதலிபட்டியில் உள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் கடந்த 5-ம் தேதி நடந்த வெடி விபத்தில் 38 பேர் பலியானார்கள். 55 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து தொடர்பாக வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசு ஆலை அதிபர் முருகேசன், குத்தகைதாரர் பால்பாண்டி, போர்மன் உதயகுமார் ஆகியோர் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதுதொடர்பாக குத்தகைதாரர் பால்பாண்டி, போர்மன் உதயகுமார் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

##~~##
ஆலை அதிபர் முருகேசன் தலைமறைவாக இருந்து வந்தார்.அவரை பற்றி போலீசார் விசாரித்து வந்த நிலையில் அவர் மதுரை அருகே உள்ள சமயநல்லூரில் பதுங்கி இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்று, அங்குள்ள கருப்பணசாமி கோவில் அருகே நின்று கொண்டிருந்த முருகேசனை கைது செய்தனர்.
விருதுநகர் சூலக்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரிடம் விபத்து நடந்தது எப்படி? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இன்று முருகேசனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை காவலில் வைப்பார்கள் என்று தெரிகிறது.
பட்டாசு ஆலை அதிபரான முருகேசன் விருதுநகர் பஞ்சாயத்து ïனியன் முன்னாள் தலைவராகவும், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளராகவும் இருந்தார். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் சுயேச்சையாக நின்று ஒன்றிய கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.