Election bannerElection banner
Published:Updated:

கன்னியாகுமரியில் கடந்த 10 மாதங்களில் 215 பேர் விபத்தில் மரணம்

கன்னியாகுமரியில் கடந்த 10 மாதங்களில் 215 பேர் விபத்தில்  மரணம்
கன்னியாகுமரியில் கடந்த 10 மாதங்களில் 215 பேர் விபத்தில் மரணம்

கன்னியாகுமரியில் கடந்த 10 மாதங்களில் 215 பேர் விபத்தில் மரணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் சாலை விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். கட்டாய ஹெல்மட் சட்டம் அமலில் இருந்தும் விபத்து மரணங்கள் ஆகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துகளைத் தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக வண்டியை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மட் அணிய வேண்டும் என்ற உத்தரவின்படி தினமும் ஏராளமான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு வருகிறது . இதுபோல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டு வருகிறது. இப்படி இருந்தும் விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது .

நேற்று ஒரே நாளில் மட்டும் நான்கு பேர், ஒரே சமயத்தில் சாலை விபத்தில் இறந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை  கன்னியாகுமரி மாவட்டத்தில் 215 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர். விபத்துகளில்  தலைக்காயம் மரணங்கள்தான் காரணமாக அமைந்துள்ளன. எனவே, வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.           

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு