Published:Updated:

சென்னையில் கன மழை: ஒருவர் பலி; போக்குவரத்து பாதிப்பு!

சென்னையில் கன மழை: ஒருவர் பலி; போக்குவரத்து பாதிப்பு!
சென்னையில் கன மழை: ஒருவர் பலி; போக்குவரத்து பாதிப்பு!
சென்னையில் கன மழை: ஒருவர் பலி; போக்குவரத்து பாதிப்பு!

சென்னை:வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான அறிகுறியாக சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை கொட்டி தீர்த்தது.இதனால் வாகன  மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக நேற்று காலையில் இருந்து  அநேக இடங்களில் மழை பெய்து கொண்டே இருந்தது.மாலை மற்றும் இரவு நேரங்களில்  மழையின் அளவு அதிகரிக்க தொடங்கியது.திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், மதுரை,  திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, ஈரோடு, நீலகிரி  மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்துள்ளது.

பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.சென்னையில் விடிய விடிய கனமழை  பெய்தது.சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. பூந்தமல்லி நெடுஞ்சாலை,  கோயம்பேடு மார்க்கெட் வடபழனி 100 அடி ரோடு, நியு ஆவடி ரோடு, வேப்பேரி,  நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதிகளில் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கி கிடந்தது.

வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, புளியந் தோப்பு, கொடுங்கை யூர், எருக்கஞ்சேரி,  மாதவரம் நெடுஞ்சாலை, திருவொற்றியூர், அம்பத்தூர், பாடி பகுதிகளிலும் தண்ணீர்  தேங்கி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

##~~##
அம்பத்தூர் தொழிற் பேட்டையில் 100-க்கும் அதிகமான தொழிற்சாலைகளில் தண்ணீர்  புகுந்துள்ள தால் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரி எதிரே  நியூ ஆவடி ரோட்டில் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வடியாமல் உள்ளது. இன்றும்  தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்வதால் ரோடுகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

ரயில் போக்குவரத்து பாதிப்பு
இதனிடையே மழை காரணமாக ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக சென்னைக்கு  வந்து செல்லும் புறநகர் மற்றும் தொலை தூர எக்ஸ்பிரஸ் ரயில்களின் போக்குவரத்தும்  பாதிக்கப்பட்டு,அவைகள் தாமதமாக சென்றன.

மழைக்கு ஒருவர் பலி
இதனிடையே சென்னை அயனாவரத்தில் இன்று காலை மழைநீரில் மின்சாரம் பாய்ந்து  ரமேஷ் (40) என்பவர் பலியானார்.