Published:Updated:

கார்மீது பேருந்து மோதி விபத்து: 11 பேர் உயிரிழந்த சோகம்... ம.பி-யில் அதிர்ச்சி!

கார்மீது பேருந்து மோதி விபத்து ( ட்விட்டர் )

மத்தியப் பிரதேசத்தின் பெதுல் என்ற இடத்தில் நேற்று இரவு கார்மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதிக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்கள், சொந்த ஊரான மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு காரில் வந்துகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கிறது.

இந்த விபத்து தொடர்பாக காவல்துறை அதிகாரிகள், "​​​​ மத்தியப் பிரதேச மாநிலம், பெதுல் மாவட்டத்திலுள்ள ஜல்லார் காவல் நிலையம் அருகே இன்று அதிகாலை கார்மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. காரில் பயணித்தவர்களில், மூன்று பெண்கள், ஐந்து வயது சிறுமி உட்பட 11 பேரும் இறந்துவிட்டனர். காரை ஓட்டியபோது ஓட்டுநர் தூங்கியதால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். காவல்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்துவருகின்றனர்'' என்றனர்.

விபத்து
விபத்து
ட்விட்டர்

இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாகவும், காயமடைந்தவர்களுக்கு ரூ,50,000 வழங்குவதாகவும் அறிவித்திருக்கிறார்.