Published:Updated:

நெல்லை அருகே சாலை விபத்து: கல்லூரி மாணவிகள் 20 பேர் காயம்!

நெல்லை அருகே சாலை விபத்து: கல்லூரி மாணவிகள் 20 பேர் காயம்!
நெல்லை அருகே சாலை விபத்து: கல்லூரி மாணவிகள் 20 பேர் காயம்!

நெல்லை அருகே சாலை விபத்து: கல்லூரி மாணவிகள் 20 பேர் காயம்!

நெல்லை அருகே நடைபெற்ற சாலை விபத்து காரணமாக தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லையை அடுத்த அரியகுளம் பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் 20 பேர் ஒரு வேனில் ஆலங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தென்காசி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் மாறந்தை அருகே தனியார் கல்லூரி மாணவிகளின் வேன் சென்றபோது, எதிரே சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி வந்த கண்டெயனர் லாரியுடன் நேருக்கு நேராக மோதியது.

இதில், வேனில் பயணம் செய்த மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் சாலையிலும், சாலையோரத்திலும் சிதறிக் கிடந்தனர். அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. வேன் டிரைவர் படுகாயம் அடைந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மாணவிகளும் 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

அடுத்த கட்டுரைக்கு