Published:Updated:

நள்ளிரவில் வாகன ஓட்டிகளைப் பதறவைத்த கன்டெய்னர் லாரி! - 2,000 லிட்டர் ஆயில் எரிந்து நாசம்

இரா.தேவேந்திரன்
நள்ளிரவில் வாகன ஓட்டிகளைப் பதறவைத்த கன்டெய்னர் லாரி! - 2,000 லிட்டர் ஆயில் எரிந்து நாசம்
நள்ளிரவில் வாகன ஓட்டிகளைப் பதறவைத்த கன்டெய்னர் லாரி! - 2,000 லிட்டர் ஆயில் எரிந்து நாசம்

நள்ளிரவில் கன்டெய்னர் லாரி பற்றி எரிந்தது. இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து வாகனத்தை ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள பண்டிகாவனூர் பகுதியில் கர்நாடக மாநிலத்திலிருந்து சென்னை துறைமுகத்துக்கு சுமார் 200 பேரல்களில் 2,000 லிட்டர் இன்ஜின் ஆயில் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. பண்டிகாவனூர் பகுதியில் நேற்றிரவு வந்துகொண்டிருந்தபோது கன்டெய்னர் லாரி டயரில் திடீரென தீ பற்றியதால் மளமளவென பற்றி எரிந்தது. நள்ளிரவில் வாகனத்தில் சென்றவர்கள் பதறியடித்து வாகனங்களை சாலையிலேயே நிறுத்தினர். தகவல் அறிந்த பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். சுமார் ஒரு மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.

இதில் 2,000 லிட்டர் இன்ஜின் ஆயில் தீயில் எரிந்து சாம்பலானதுடன்  கன்டெய்னர் லாரியும் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த பெட்ரோல் பங்க்குக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. லாரி ஓட்டுநரும் கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் அறிந்து விரைந்து வைந்த சோழவரம் காவல்துறையினர் வழக்கு பதித்து விசாரணை மேற்கொண்டனர். நள்ளிரவில் சாலையில் சென்ற லாரி தீப்பிடித்து எரிந்ததால் பெரியபாளையம்- செங்குன்றம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.