Published:Updated:

மலேசியா: நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டவர்கள் மாயம்... தொடரும் மீட்புப்பணி!

நிலச்சரிவு மீட்புக்குழு
News
நிலச்சரிவு மீட்புக்குழு ( ட்விட்டர் )

மலேசியாவில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

மலேசியா: நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலி; 20-க்கும் மேற்பட்டவர்கள் மாயம்... தொடரும் மீட்புப்பணி!

மலேசியாவில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
நிலச்சரிவு மீட்புக்குழு
News
நிலச்சரிவு மீட்புக்குழு ( ட்விட்டர் )

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியிலுள்ள சிலாங்கூர் மாநிலத்தில், அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சாலையோரத்தில் இருந்த பண்ணை வீடு உட்பட பல கட்டடங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தேசியப் பேரிடர் மேலாண்மை முகமையின் சமூக ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 59 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், 22 பேர் தேடப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

நிலச்சரிவு மீட்புக்குழு
நிலச்சரிவு மீட்புக்குழு
ட்விட்டர்

ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பில் 12 பேர் இறந்ததாகவும், 8 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக மாவட்டக் காவல்துறைத் தலைவர் சுஃபியன் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், "விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், மீட்புக்குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தோம். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பல நிறுவனங்களிலிருந்து கிட்டத்தட்ட 400 பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறார்.