Published:Updated:

` மூன்றே கிலோ மீட்டர்; ஒரே ஆண்டில் 12 பேர் மரணம்!'- அலறவிடும் திண்டுக்கல் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை

தேசிய நெடுஞ்சாலை - வீரபாண்டி
தேசிய நெடுஞ்சாலை - வீரபாண்டி

குறிப்பிட்ட பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்படுவது தேனி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வருடா வருடம் 10க்கு மேற்பட்டோரைக் காவு வாங்குவதால், வீரபாண்டி முதல் எஸ்.எஸ் காலனி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கவே தேனி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் வழியாகச் செல்லும் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளில், திண்டுக்கல் - கொல்லம் (NH 183) தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வீரபாண்டி. இப்பகுதியிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எஸ்.எஸ் காலனி வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், தொடர் விபத்துகள் ஏற்படுவதும், அதனால் பலர் படுகாயமடைந்து கை, கால்களை இழப்பதும், சிலர் உயிரிழப்பதும் தொடர்கதையாகவே உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை - வீரபாண்டி
தேசிய நெடுஞ்சாலை - வீரபாண்டி

தமிழக கேரளப் பகுதிகளை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் NH 183 வழியாகத்தான் சபரிமலை, தேக்கடி, இடுக்கி ஆகிய பகுதிகளுக்குச் செல்ல முடியும். இதனால், சுற்றுலாப்பயணிகளும், கனரக வாகனங்களும் தொடர்ச்சியாகச் சென்றுகொண்டிருக்கும் சாலையாக இருக்கிறது. மேலும், சபரிமலை சீசன் ஆரம்பித்துவிட்டதால், வெளிஊர்களிலிருந்து ஐயப்ப பக்தர்கள் இச்சாலையில்தான் பயணிக்கின்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட பகுதியில் தொடர் விபத்துகள் ஏற்படுவது தேனி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நான்கு தினங்களுக்கு முன்னர், சின்னமனூரைச் சேர்ந்த பூ வியாபாரி, காளிமுத்து, தனது மனைவி மாரியம்மாள், ஒன்றரை வயதுக் குழந்தை காளீஸ்வரபாண்டியன் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம், இதே இடத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில், காளிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். மாரியம்மாள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இச்சம்பவம், அருகே இருந்த கடை ஒன்றின் சி.சி.டி.வி கேமராவில் பதிவான நிலையில், அந்த சி.சி.டி.வி காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகியது. இச்சம்பவம் நடந்து இரண்டு தினங்களில், ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம், இதே இடத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானதில் ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து சி.சி.டி.வி காட்சி
விபத்து சி.சி.டி.வி காட்சி
Vikatan

இது தொடர்பாக அப்பகுதிவாசி முருகன் கூறும்போது, “இந்த இடத்தில் சராசரியாக வருடத்திற்கு 10-க்கு மேற்பட்டோர் பலியாகிறார்கள். சுமார் 60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தங்களது இயல்பு வாழ்கையை இழக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது ஐயப்ப சீசன் ஆரம்பித்துவிட்டதால் விபத்துகள் அதிகரிக்குமோ என்று பயமாக இருக்கிறது. விபத்துகள் அதிகம் ஏற்படுவதால், காவல்துறை சார்பில் பேரிகார்டு அமைத்தார்கள். இந்த பேரிகார்டு அமைத்ததால்தான் அதிக விபத்து ஏற்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு, எதிரே வரும் வாகனத்தை இந்த பேரிகார்டு மறைத்துவிடுகிறது. மேலும், சாலையில், மண் அதிகம் இருக்கிறது. அதை யாரும் சுத்தம் செய்வதில்லை. இதனால், வாகனங்கள் வேகத்தைக் குறைக்கும் போது கட்டுப்பாட்டை இழக்கின்றனர். மேலும், விழிப்புணர்வு பலகை, ரெட் சிக்னல் என எத்தனை இருந்தாலும் விபத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்பகுதியில் இரண்டு சாலை சந்திப்புகள் உள்ளன. ஒன்று தப்புக்குண்டு, மற்றொன்று வீரபாண்டி. எனவே, இங்கு வேகத்தடை அவசியம். ஆனால், நெடுஞ்சாலைத்துறை வேகத்தை அமைக்க மறுக்கிறது.!” என்றனர்.

கடைக்குச் சென்ற குடும்பம்; கட்டுப்பாட்டை இழந்த கார்- குலசேகரம் அருகே சோகத்தை ஏற்படுத்திய விபத்து!
தேசிய நெடுஞ்சாலை - வீரபாண்டி
தேசிய நெடுஞ்சாலை - வீரபாண்டி

வீரப்பாண்டி காவல்துறை தரப்பில் கேட்ட போது, “வாகன ஓட்டிகளின் வேகம்தான் விபத்திற்கான முதல் காரணம். இரண்டாவதாக, சாலை நடுவே சென்டர்மீடியன் மற்றும் வேகத்தை அமைத்தால், நன்றாக இருக்கும். இந்த ஆண்டு மட்டும், 12 உயிரிழப்புகள் அங்கே நடந்திருக்கின்றன.” என்றனர்.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை சிறப்பு வருவாய் அலுவலரிடம் கேட்ட போது, “விபத்துகள் தொடர்வது வருத்தமளிக்கிறது. இனி விபத்துகள் ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு