Published:Updated:

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து:  ஒருவர் பலி!
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: ஒருவர் பலி!

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை ஒன்றில் இன்று நிகழ்ந்த தீ விபத்தில் ஒருவர் பலியானார்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து:  ஒருவர் பலி!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது செங்கமலப்பட்டி. இங்கு சங்கரேஸ்வரி (  50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், இன்று காலை 8 மணிக்கு வழக்கம்  போல், 10 க்கும் மேற்பட்ட அறைகளில் தனித்தனியாக பட்டாசு தயாரிக்கும் பணியில்  ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஒரு அறையில் ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் உள்பட 2 பேர்  புஸ்வாணம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று தீ விபத்து

##~~##
ஏற்பட்டு  அங்கு இருந்த பட்டாசுகளில் தீ பிடித்து,. பட்டாசுகள் வெடித்து சிதறியன.
இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த சம்பவத்தில் செல்வராஜ் உடல்  கருகி பரிதாபமாக இறந்தார். மேலும் ஒருவர் உடல் படுகாயமடைந்தார். அவரது  நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீ  தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

படம்: முத்து