Published:Updated:

போரூர் ஏரிக்குள் பாய்ந்த பைக்... தந்தை, மகனை நொடிப்பொழுதில் காப்பாற்றிய தனி ஒரு காவலர்!

போரூர் ஏரிக்குள் பாய்ந்த பைக்... தந்தை, மகனை நொடிப்பொழுதில் காப்பாற்றிய தனி ஒரு காவலர்!
போரூர் ஏரிக்குள் பாய்ந்த பைக்... தந்தை, மகனை நொடிப்பொழுதில் காப்பாற்றிய தனி ஒரு காவலர்!

போரூர் ஏரிக்குள் பாய்ந்த பைக்... தந்தை, மகனை நொடிப்பொழுதில் காப்பாற்றிய தனி ஒரு காவலர்!

சென்னை போரூர் ஏரி மேம்பாலத்தில் பைக்கில் வந்த அப்பா, மகன் விபத்தில் சிக்கி தண்ணீருக்குள் விழுந்தனர்.  அதைப் பார்த்த போக்குவரத்துக் காவலர், அதிரடியாகக் களமிறங்கி இருவரையும் காப்பாற்றியுள்ளார். 

சென்னை போரூர்- மதுரவாயல் பைபாஸ் மேம்பாலத்தில் நேற்று, டூவிலரில் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது, தடுப்புச் சுவரில் டூவிலர் மோதியுள்ளது. அதனால், ஒருவர் மட்டும் சாலையில் விழ, மற்ற இரண்டு பேரும் ஏரிக்குள் விழுந்துவிட்டனர். இந்த விபத்தை, அங்கு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் வெங்கடேஷ் பார்த்திருக்கிறார். அப்போது, ஏரிக்குள் விழுந்தவர்கள் தண்ணீரில் உயிருக்குப் போராடியுள்ளனர்.

உடனே காவலர் வெங்கடேஷ், தன்னுடைய சட்டையைக் கழற்றிவிட்டு ஏரிக்குள் குதித்துள்ளார். நீச்சலடித்துச் சென்று, அவர்கள் இருவரையும் காப்பாற்றியுள்ளார். காவலருக்கு உதவியாக அப்பகுதியில் உள்ளவர்கள் செயல்பட்டுள்ளனர். பிறகு, மீட்கப்பட்ட இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

 போக்குவரத்துக் காவலர் வெங்கடேஷின் துரித நடவடிக்கையால் இரண்டு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்குறித்துத் தகவலறிந்ததும், உயரதிகாரிகள் அவரைப் பாராட்டினர். பொதுமக்களும் காவலர் வெங்கடேஷின் செயலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  "போரூர் ஏரிக்குள் விழுந்தது, பூந்தமல்லியைச் சேர்ந்த ஜெமினியும் அவரது மகன் அசோகனும் என்று தெரியவந்தது. ஜெமினியின் மனைவி ஜெயந்தி, சாலையில் விழுந்ததில் படுகாயமடைந்தார்" என்றனர். 

கணவனையும் மகனையும் காப்பாற்றிய காவலர் வெங்டேஷைப் பார்த்து ஜெயந்தி, ''உங்க குடும்பம் நல்லா இருக்கணும் சாமீ...'' என்று கையெடுத்துக் கும்பிட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். 

அடுத்த கட்டுரைக்கு