Published:Updated:

தந்தையின் கவனக்குறைவால் பலியான குழந்தை! தந்தையர் தினத்தில் சோகம்

சிந்து ஆர்

காரை பின்பக்கமாக செலுத்திய தந்தையின் கவனக்குறைவால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியது.

நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன் புதூரை சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு அக்‌ஷிதா என்ற மகளும், லெக்சை என்ற மகனும் இருந்தனர். லெக்சை-க்கு ஒன்றரை வயதுதான் ஆகிறது. இன்று ஞயிற்றுக்கிழமை விடுமுறைதினம் என்பதால் ஜெகன் தனது காரை சர்வீஸுக்கு விட முடிவு செய்தார். அவரது மகன் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருப்பதை கவனிக்காமல் காரை பின்புறமாக எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் குழந்தை மீது மோதியது. குழந்தையின் அழுகை சப்தம்கேட்டு காரை நிறுத்திவிடு இறங்கிய ஜெகன் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். அங்கு குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உலக தந்தையர் தினமான இன்று தந்தையின் கவனக்குறைவால் ஒன்றரை வயது மகன் பலியான சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகினர்.