Published:Updated:

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் தீ: விமான சேவைகள் பாதிப்பு

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் தீ: விமான சேவைகள் பாதிப்பு
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் தீ: விமான சேவைகள் பாதிப்பு
சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் தீ: விமான சேவைகள் பாதிப்பு

சென்னை : சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள  கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் பல மணி நேரமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ விபத்தால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில், கட்டுப்பாட்டு அறையில் இருந்த கணிப்பொறிகள் சேதமடைந்தன.

##~~##
சிக்னல்கள் செயலிழந்ததால், சென்னையில் இருந்து செல்ல வேண்டிய விமானங்கள், தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற இடங்களில் இருந்து, சென்னை வர வேண்டிய விமானங்கள், பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையில் இந்த பேட்டரிகள் வெடித்ததே இந்த தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.