Published:Updated:

விழிஞ்ஞம் துறைமுகத்தில் நடந்த விபத்து! - உயிரிழந்த மீனவர்

விழிஞ்ஞம் மீன்பிடித் துறைமுகத்தில், வள்ளத்தைக் கடலில் இறக்கியபோது ராட்சஷ அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது. இதில் ஒரு மீனவர் பலியானார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால், கேரள மாநிலத்திலும் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்வதில்லை. ஆனால் நாட்டுப்படகுகள், கட்டுமரங்கள் மற்றும் வள்ளங்களில் கரையோரம் மீன்பிடித்தல் நடந்துவருகிறது. இந்த நிலையில், கேரள மாநிலம் விழிஞ்ஞம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று காலை வள்ளத்தில் மீன்பிடிக்க மீனவர்கள் புறப்பட்டனர். கரையிலிருந்து வள்ளத்தைக் கடலில் இறக்கியபோது, ராட்சஷ அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்தது. வள்ளத்தின் அடியில் சிக்கி, புதியறையைச் சேர்ந்த மீனவர் ஸிர்லின் (55) பரிதாபமாக இறந்தார். இதில் மற்றொரு மீனவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். விழிஞ்ஞம் மீன்பிடித் துறைமுகத்தில் வள்ளம் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.