Published:Updated:

மராட்டியத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 37 பேர் பலி

மும்பை: மராட்டிய மாநிலத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

##~~##

கோவாவில் இருந்து மும்பைக்கு இன்று காலை பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்து மராட்டிய மாநிலம் ரத்தினகிரி அருகே பாலத்தின் மீது வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது கீழே விழுந்தது.
 

மராட்டியத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 37 பேர் பலி

இதில், பயணிகள் 37 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். பலத்த காயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

படம்: ஏ.பி.