Published:Updated:

மும்பை தீ விபத்தில் வீட்டை இழந்த 'ஸ்லம்டாக்' சிறுமி

மும்பை தீ விபத்தில் வீட்டை இழந்த 'ஸ்லம்டாக்' சிறுமி

மும்பை, மார்ச் 5,2011

மும்பை தீ விபத்தில் வீட்டை இழந்த 'ஸ்லம்டாக்' சிறுமி

மும்பையின் பந்த்ரா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 'ஸ்லம்டாக் மில்லியனர்' குழந்தை நட்சத்திரமான 12 வயது சிறுமி ரூபினி அலி தனது வீட்டை இழந்தார். ##~~##

பந்த்ரா பகுதியில் உள்ள கரீப் நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஏறத்தாழ 2000 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தனது குடிசைக்குள் தீப்பிடித்து எரிந்தபோது, வீட்டில் தான் தாம் இருந்ததாக ரூபினி கூறியுள்ளார்.

இதுவரை தனக்கு உதவி செய்ய யாருமே வரவில்லை என்று கூறியுள்ள அவர், தனது வீட்டில் வைத்திருந்த ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கான நினைவுப் பரிசுகள் அனைத்தும் எரிந்துவிட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கடந்த 2008-ல் வெளியான ஆஸ்கர் விருது பெற்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நாயகின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் ரூபினி அலி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு