Published:Updated:

ஆண்டிப்பட்டி: தனியார் பேருந்துகள் மோதி 17 பேர் பலி

Vikatan Correspondent

ஆண்டிப்பட்டி, டிச.2,2010

ஆண்டிப்பட்டி அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் பலியானார்கள்; 90 பேர் படுகாயம் அடைந்தனர்.##~~##

தேனி மாவட்டம் சின்னமனூரில் இருந்து நேற்று இரவு மதுரை நோக்கி தனியார் பேருந்து புறப்பட்டு வந்தது. அதே சமயம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து போடி நோக்கி ஒரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.

இந்த பேருந்துகள் நேற்று இரவு 8 மணி அளவில் ஆண்டிப்பட்டி அருகே சண்முகசுந்தரபுரம் விலக்கு அருகே நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் திருமங்கலம் பேருந்து, சின்னமனூர் பேருந்துசுக்குள் பாதி வரை புகுந்தது. பின்னர் 100 அடி தூரம் வரை சென்று அந்த பேருந்து தலை குப்புற கவிழ்ந்து விட்டது. இரண்டு பேருந்துகளும் நொறுங்கின.

விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் தேனி, ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தில் சிக்கி கவிழ்ந்த பேருந்துசின் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 14 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. அவர்களில் 5 ஆண்கள், 7 பெண்கள், 2 சிறுவர், சிறுமிகள் அடங்குவர்.

விபத்தில் சிக்கி காயத்துடன் மீட்கப்பட்ட 90 பேர் க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் 15 பேர் தலைக்காயத்துடன் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

விபத்தில் சிக்கி பலியானவர்கள் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை. இரண்டு பேருந்துகளின் டிரைவர்கள் என்ன ஆனார்கள் என்பதும் தெரியவில்லை. விபத்து நடந்த இடத்தில் பயணிகளின் உடமைகள் சிதறி கிடந்தன.

அதிக வேகத்தில் பேருந்துகள் வந்ததால் தான் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.