Published:Updated:

கொடைக்கானல் மலையில் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி (படங்கள்)

கொடைக்கானல் மலையில் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி (படங்கள்)
கொடைக்கானல் மலையில் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி (படங்கள்)

திண்டுக்கல்: கொடைக்கானல் மலையில்  இன்று காலையில் 300 அடி பள்ளத்தில் மணல் லாரி கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார்.
 

கொடைக்கானல் மலையில் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி (படங்கள்)

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் இருந்து இன்று காலையில் கொடைக்கானலுக்கு மணல் ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

கொடைக்கானல் மலையில் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி (படங்கள்)

கொடைக்கானல் அம்சாபுரத்தை சேர்ந்த வேல்முருகன் லாரியை ஓட்டி சென்றார். மலைப் பாதையில் டம்டம் பாறை அருகே லாரி சென்று கொண்டிருந்த போது வளைவில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக சாலையின் இடதுபுறம் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

கொடைக்கானல் மலையில் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி (படங்கள்)

இதில் லாரியில் வந்த கிளீனர் தீபக் வெளியே தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் வேல்முருகன் படுகாயங்களோடு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

லாரியில் இன்னொரு நபரும் உடன் வந்ததாக அருகிலுள்ளவர்கள் தெரிவித்தனர். அந்த நபர் என்ன ஆனார் என்ற விபரம் தெரியவில்லை. விபத்து குறித்து தேவதானபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


ஜி.பிரபு

படங்கள்:
வீ.சக்தி அருணகிரி