Published:Updated:

டேங்கர் லாரி மோதிய விபத்தில் பெண் பலி!

டேங்கர் லாரி மோதிய விபத்தில் பெண் பலி!
டேங்கர் லாரி மோதிய விபத்தில் பெண் பலி!

சென்னை புளியந்தோப்பு அருகே இருசக்கர வாகனத்தின் மீது டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற நபருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக சாலைகளில் செல்லும் டேங்கர் லாரி மோதி பல்வேறு விபத்துகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சர்மிளா என்பவர் கோபி என்ற நண்பருடன் இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தை கோபி ஓட்டிச் சென்றார். பின் இருக்கையில் சர்மிளா அமர்ந்திருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற டேங்கர் லாரியை முந்திச் செல்ல முயன்ற கோபி, நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரம் சர்மிளா மீது ஏறியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.