Published:Updated:

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இடிந்துவிழும் பாலங்கள்! தப்பிய தாெழிலாளர்கள்

சத்யா கோபாலன்
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இடிந்துவிழும் பாலங்கள்! தப்பிய தாெழிலாளர்கள்
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இடிந்துவிழும் பாலங்கள்! தப்பிய தாெழிலாளர்கள்

மேற்கு வங்க மாநிலத்தில் கட்டுமான பணியில் இருந்த ஒரு பாலம் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இது இடிந்து விழும் மூன்றாவது பாலமாகும். 

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இடிந்துவிழும் பாலங்கள்! தப்பிய தாெழிலாளர்கள்

மேற்கு வங்க மாநிலம் கக்விப் (kakdwi) பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு பாலம் இன்று காலை திடீரென இடிந்து விழுந்தது. மேற்கு வங்கத்தில் இந்த மாதம் மட்டும் இடிந்து விழும் மூன்றாவது பாலம் இதுவாகும். விபத்து பற்றி பேசிய பர்கனாஸ் மாவட்ட நீதிபதி ரத்னகரா ராவ், “இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் யாரும் எந்தக் காயமும் உயிர் சேதம் போன்ற அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இடிந்துவிழும் பாலங்கள்! தப்பிய தாெழிலாளர்கள்

முன்னதாக செப்டம்பர் 4-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள 50 வருட பழைமையான பாலம் இடிந்து விழுந்தது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். ஐந்து கார்கள் மற்றும் தனியார் பேருந்து, ஐந்து இருசக்கர வாகனங்கள் ஆகியவை இந்த விபத்தில் சிக்கின. இதைத்தொடர்ந்து செப்டம்பர் 7-ம் தேதி சிலிகுரி பகுதியில் உள்ள பழைமையான பாலம் இடிந்து விழுந்ததில் ட்ரக் ஓட்டுநர் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.