Published:Updated:

கார்த்தி படப்பிடிப்பில் வெள்ளம், நிலச்சரிவு! - குலு மனாலியில் 140 தமிழர்கள் தவிப்பு

எம்.குணா
கார்த்தி படப்பிடிப்பில் வெள்ளம், நிலச்சரிவு! - குலு மனாலியில் 140 தமிழர்கள் தவிப்பு
கார்த்தி படப்பிடிப்பில் வெள்ளம், நிலச்சரிவு! - குலு மனாலியில் 140 தமிழர்கள் தவிப்பு

இமாசலப்பிரதேசத்தில் உள்ள குலு மனாலியில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி நடிகர் கார்த்தி உள்ளிட்ட 140 தமிழர்கள் தவித்து வருகின்றனர்.

கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு இமாசலப்பிரதேசத்தில் உள்ள குலு மனாலியில் நடந்துவருகிறது. சென்னையிலிருந்து கார்த்தி மற்றும் 140 நபர்கள் யூனிட்டோடு குலு மனாலி சென்றனர். அங்கே இருக்கும் மலையின் உச்சியில் கார்த்தி நடிக்கும் காட்சிகளைப் படம்பிடித்துக்கொண்டிருந்தனர். கடந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு, குலு மனாலியில் பேய்மழை பெய்து பெருவெள்ளம் பெருக்கெடுத்தது. கடும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

மலையின் மேல் இருந்த கார்த்தியைக் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு இடையில் காப்பாற்றி ஒரு கிராமத்தில் தங்க வைத்திருக்கிறார்கள். பெரும் வெள்ளத்தில் படப்பிடிப்புக்குப்போன வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. நிலச்சரிவு ஏற்பட்டு மலைக்குச் செல்லும் பாதைகள் முழுவதும் அடைபட்டுக் கிடக்கிறது. 'தேவ்' படப்பிடிப்புக்காக மலையின் உச்சிக்குச் சென்ற 140 தமிழர்கள் சாப்பிட உணவில்லாமலும் பாதுகாப்பு இல்லாமலும் தவித்து வருகின்றனர்.