Published:Updated:

வீட்டில் வெடித்துச் சிதறியது ஃப்ரிட்ஜ்! பறிபோயின குழந்தை உட்பட 4 பேரின் உயிர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டில் வெடித்துச் சிதறியது ஃப்ரிட்ஜ்! பறிபோயின குழந்தை உட்பட 4 பேரின் உயிர்கள்
வீட்டில் வெடித்துச் சிதறியது ஃப்ரிட்ஜ்! பறிபோயின குழந்தை உட்பட 4 பேரின் உயிர்கள்

வீட்டில் வெடித்துச் சிதறியது ஃப்ரிட்ஜ்! பறிபோயின குழந்தை உட்பட 4 பேரின் உயிர்கள்

வீட்டில் வைத்திருந்த ரெஃப்ரிஜிரேட்டரின் கம்ப்ரசர் வெடித்ததில், நான்கு பேர் உயிரிழந்தனர். இரண்டு பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தர்பன் காலனிப் (Darpan Colony) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியின் கம்ப்ரசர் எதிர்பாராமல் வெடித்ததால், வீட்டின் சுவர் பகுதி இடிந்துவிழுந்தது. இந்த விபத்தில் சிக்கி, இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வீட்டின் உள்ளே 9 பேர் இருந்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. எனினும், முழுமையான தகவல் வெளியாகவில்லை. சுவர் இடர்பாட்டில் சிக்கி 2 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். 

பெரிய சத்தத்துடன் விபத்து ஏற்பட்டதையடுத்து, அருகில் குடியிருந்தவர்கள், போலீஸாருக்கும் மீட்புக் குழுவினருக்கும் உடனடியாக தகவல் அளித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீஸார் மற்றும் மீட்புக் குழுவினர், முதற்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். விபத்துகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு