Published:Updated:

30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண்! விமான கதவை மூடியபோது நடந்த சோகம்

ஜெனிஃபர்.ம.ஆ
30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண்! விமான கதவை மூடியபோது நடந்த சோகம்
30 அடி உயரத்திலிருந்து விழுந்த விமானப் பணிப்பெண்! விமான கதவை மூடியபோது நடந்த சோகம்

மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்திய விமானம், மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது, விமானத்தின் கதவுகளைமூட முயன்ற பணிப் பெண் தவறி விழுந்தார்.

ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம் இன்று காலை 7  மணி அளவில், டெல்லி புறப்படத் தயாராக இருந்தபொழுது, விமானத்தின் படிகளை இடைவெளியில்லாமல் மூடும் பணியை மேற்கொள்ளக் கதவுகளை திறந்தபோது 53 வயதான ஹர்சா லோபோ என்ற பணிப்பெண் தவறி விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். விமானத்தின் கதவுகள் தரையிலிருந்து முப்பது அடி உயரத்தில் இருப்பவை. அதிலிருந்து கீழே விழுந்த விமானப் பணிப் பெண் வலது காலில் பலத்த அடியுடன், கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட ஏர் இந்தியா நிறுவனம், ``இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன் ஏர் இந்திய விமானம் திருச்சியில் விமான நிலைய சுற்றுச் சுவரில் மோதியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஏர் இந்திய விமான இன்ஜின் பொறியாளர், விமானிகள் சிக்னலை தவறாகப் புரிந்துகொண்டு, விமான இன்ஜினை ஆன் செய்ததால், இன்ஜினுக்குள் சிக்கிக்கொண்ட பரிதாபம் நிகழ்ந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியப் பணியாளருக்கு நேர்ந்துள்ள மற்றுமொரு விபத்து அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.