Published:Updated:

அரசுப் பேருந்து மோதி பள்ளிச் சிறுவன் பலி! - கோவையில் சோகம்

குருபிரசாத்
அரசுப் பேருந்து மோதி பள்ளிச் சிறுவன் பலி! - கோவையில் சோகம்
அரசுப் பேருந்து மோதி பள்ளிச் சிறுவன் பலி! - கோவையில் சோகம்

கோவை செல்வபுரம் அருகே அரசுப் பேருந்து மோதியதில், பள்ளிச் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செல்வபுரம் பகுதியில் சென்டரிங் வேலை செய்துவரும் உதயராஜ் என்பவரின் மகன் சுபாஷ் (8). இவர், செல்வபுரம் சிவாலயா திரையரங்கம் அருகே உள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இந்தச் சிறுவன் இன்று வழக்கம்போல பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று  கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து (காந்திபுரம்  டு அறிவொளி நகர்) எல்ஐசி காலனியருகே சிறுவன்மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனை  அருகே இருந்தவர்கள், கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர்.

ஆனால், சிறுவன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம்குறித்து செல்வபுரம் போலீஸார் விசாரணைசெய்துவருகின்றனர். மேலும், சிறுவனின் உடலை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இது தொடர்பாக செல்வபுரம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.