Published:Updated:

`அன்று அதிகாலை 4 மணி..!' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்

`அன்று அதிகாலை 4 மணி..!' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்
`அன்று அதிகாலை 4 மணி..!' - விபத்து குறித்து பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர் வாக்குமூலம்

கேரளாவில் நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த பாலபாஸ்கரின் கார் ஓட்டுநர், விபத்துகுறித்து தற்போது வாக்குமூலம் அளித்துள்ளார். 

கேரள இசையமைப்பாளரும், வயலின் கலைஞருமான பாலபாஸ்கர், கடந்த மாதம் 25-ம் தேதி தன் குடும்பத்தினருடன் கோயிலுக்குச்சென்று திரும்பும்போது, பள்ளிபுரம் அருகே நடந்த கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். தொடர்ந்து ஒருவார தீவிர சிகிச்சைக்குப் பிறகு, கடந்த 2-ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். அதே விபத்தில். முன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலபாஸ்கரின் இரண்டு வயது குழந்தை தேஜஸ்வினி படுகாயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த பாலபாஸ்கரின் மனைவி லக்ஷ்மி மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று, பிறகு வீடு திரும்பினர். பாலபாஸ்கர் மற்றும் அவரின் குழந்தை இறந்த சம்பவம் மொத்த கேரளாவையும் சோகத்துக்குள்ளாக்கியது. 

இந்நிலையில், தற்போது விபத்து நடந்தது தொடர்பாக பாலபாஸ்கரின் ஓட்டுநர் அர்ஜுன், போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ‘ நான் திருச்சூரில் இருந்து கொல்லம் வரை மட்டுமே கார் ஓட்டினேன். அதன் பின்னர் பாலபாஸ்கர் சார்தான் வண்டியை ஓட்டிவந்தார். விபத்து நடந்த நேரத்தில் அவரது மனைவி லக்‌ஷ்மியும், குழந்தையும் முன் இருக்கையில் அமர்ந்திருந்தனர். நான், பின் இருக்கையில் இருந்தேன். அன்று அதிகாலை 4 மணியளவில், சி.ஆர்.பி.எஃப் கேம்ப் ஜங்ஷன் அருகில்தான் விபத்து நடந்தது. பாலபாஸ்கர் சார் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறினார். கார் சறுக்கி, வேகமாகச் சென்று மரத்தில் மோதி நின்றது. விபத்தின்போது நான் பின் இருக்கையில் இருந்ததால், எனக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை” எனக் கூறியுள்ளார்.