Published:Updated:

பேருந்துகள் கவிழ்ந்து விபத்து: 34 பேர் படுகாயம் (படங்கள்)

 பேருந்துகள் கவிழ்ந்து விபத்து:  34 பேர் படுகாயம் (படங்கள்)
பேருந்துகள் கவிழ்ந்து விபத்து: 34 பேர் படுகாயம் (படங்கள்)

தொண்டி: சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து இன்று அதிகாலையில் தொண்டி அருகே நிலை தடுமாறி கவிழ்ந்ததில் 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

 பேருந்துகள் கவிழ்ந்து விபத்து:  34 பேர் படுகாயம் (படங்கள்)

சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நேற்றிரவு கிளம்பிய அரசு விரைவுப் பேருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக தனது பயணத்தை தொடர்ந்தது.

 பேருந்துகள் கவிழ்ந்து விபத்து:  34 பேர் படுகாயம் (படங்கள்)

இன்று அதிகாலை 5.30 மணியளவில் தொண்டி அருகே உள்ள வட்டாணம் என்ற இடத்தில் பேருந்து வந்து கொண்டிருந்த போது திடீரென விபத்திற்குள்ளாகி வயலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தார்கள்.

 பேருந்துகள் கவிழ்ந்து விபத்து:  34 பேர் படுகாயம் (படங்கள்)

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு இடுப்பு எலும்பு முறிந்ததால் மேல் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 பேருந்துகள் கவிழ்ந்து விபத்து:  34 பேர் படுகாயம் (படங்கள்)

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்திலிருந்து நேற்று மாலை சென்னைக்கு கிளம்பிய தனியார் பேருந்து நள்ளிரவில் விராலிமலை அருகே விபத்திற்குள்ளாக தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது.