Published:Updated:

‘தண்டவாளத்தில் நின்றால் விழா நன்றாகத் தெரியும்’ - வெளியாயின பதைபதைக்கும் அமிர்தசரஸ் விபத்துக் காட்சிகள்

அமிர்தசரஸ் அருகே நடந்த கோர ரயில் விபத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 

‘தண்டவாளத்தில் நின்றால் விழா நன்றாகத் தெரியும்’ - வெளியாயின பதைபதைக்கும் அமிர்தசரஸ் விபத்துக் காட்சிகள்

நேற்று நாடுமுழுவதும் தசரா பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே, ஜோரா பதாக் என்னும் இடத்திலும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையின் ஒரு பகுதியாக, ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரயில் பாதைக்கு அருகே நடைபெற்ற இந்தக் கொண்டாட்டத்தின்போது, சிலர் ரயில்வே தண்டவாளத்தில் நின்றுகொண்டு ராவணன் உருவ பொம்மை எரிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மக்கள் கூட்டத்துக்குள் விரைவு ரயில் புகுந்தது  இந்த விபத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 70 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். `ரயில் அதிகம் பயணிக்கும் பகுதியில் அதுவும் தண்டவாளத்தின் அருகில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்தது யார்?' என்பது போன்ற பல கேள்விகளும் அம்மாநில அரசைச் சுற்றுகின்றனர். 

சம்பவத்தை நேரில் பார்த்தவர் இதுபற்றி கூறும்போதும் ``தசரா விழாவில் மொத்தம் 700-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். அதுவும் தண்டவாளத்தில் மட்டும் சுமார் 300 பேர் நின்றுகொண்டிருந்தனர். ராவணன் உருவபொம்மையில் இருந்த பட்டாசுகள் வெடித்த சத்தத்தில் ரயில் வரும் சத்தம் கேட்கவில்லை. தண்டவாளம் சற்று உயரமாக இருந்ததால் அதில் ஏறி நின்று பார்த்தால் நிகழ்ச்சி நன்றாகத் தெரியும் என்று பலர் தண்டவாளத்தில் நின்றுகொண்டிருந்தனர். இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் உயிரிழந்துள்ளனர்’ எனக் கூறினார். 

‘தண்டவாளத்தில் நின்றால் விழா நன்றாகத் தெரியும்’ - வெளியாயின பதைபதைக்கும் அமிர்தசரஸ் விபத்துக் காட்சிகள்

சம்பவம் நடைபெறும்போது பலர் தசரா நிகழ்ச்சியை தங்களின் போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக நுழைந்த ரயிலின் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. வீடியோவில், பலரும் ஆர்வமாக நின்று விழாவைப் பார்த்துக்கொண்டும் தங்களின் போன்களில் படம்பிடித்துக்கொண்டும் உள்ளனர். ரயில் மிக அருகில் வரும் வரை யாரும் அதைக் கவனிக்கவில்லை. ரயில் வந்தவுடன் பலரும் அங்கிருந்து குதித்து தப்ப முயற்சி செய்கின்றனர் இருப்பினும் பலர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

எச்சரிக்கை : பலவீனமானவர்கள் கீழே உள்ள வீடியோவை பார்க்க வேண்டாம்

வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும் : https://www.facebook.com/gopinath.soren.129/videos/2211858142426581/