
மதுரை: மதுரையில் உள்ள பிரபல துணிக்கடைக்கான குடோன் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மணல் சரிந்து விழுந்ததில் 2 பேர் இறந்தனர். மூன்று பேர் காயமடைந்திருக்கின்றனர்.
மதுரையில் பிரபலமான போத்தீஸ் துணிக்கடையினர், கடையின் பின்புறமுள்ள மேற்கு பாண்டியன் அகில் தெருவில் குடோன் ஒன்றை கட்டி வருகின்றனர். இதில் இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று வேலை செய்துக் கொண்டிருந்தனர்.
குறுகிய சந்து போன்ற அந்தப்பகுதியில், பூமிக்கு அடியில் கட்டிடம் கட்டுவதற்காக மதியம் ஒரு மணியளவில் தோண்டும்போது, மணல் சரிந்து, ஐந்து பேர் மணலுக்குள் சிக்கிக் கொண்டார்கள். பின்பு, தீயனைப்புத் துறையினர், காவல் துறையினர், பொது மக்கள் விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
##~~## |
இதில், கட்டிட தொழிலாளர்களான மதுரை புறநகர் பகுதியை சேர்ந்த முத்து, பாண்டிசெல்வி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். மங்களேஸ்வரி என்பவர் மிகவும் சீரியசான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த இன்னும் இருவரின் முகவரியை கன்டுபிடிக்க முடியவில்லை.
சம்பவம் நடந்த இடத்தை, உதவி கமிஷனர் திருநாவுக்கரசு வந்து பார்வையிட்டார். நெருக்கடியான சந்துக்குள் குடோன் கட்டுவதற்கு மாநகராட்சியில் அனுமதி வாங்கினார்களா? கட்டிடத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலில் பணியமர்த்திய கட்டிட காண்ட்ரக்டர் யார்? என்பது பற்றி, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செ.சல்மான்
படங்கள்:
பா.காளிமுத்து