Published:Updated:

அரக்கோணத்தில் சரக்கு ரயிலில் தீ: 2 பெட்டிகள் சேதம்

அரக்கோணத்தில் சரக்கு ரயிலில் தீ: 2 பெட்டிகள் சேதம்
அரக்கோணத்தில் சரக்கு ரயிலில் தீ: 2 பெட்டிகள் சேதம்

சென்னை: வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் அரிசி மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்த போது ரயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

##~~##
சென்னையில் இருந்து பெங்களூருக்கு அரிசி மூட்டைகளுடன் இன்று பிற்பகல் சரக்கு ரயில் ஒன்று சென்றது. இந்த ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, தொழிலாளர்கள் அரிசி மூட்டைகளை இறக்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பற்றியது. பின்னர் அருகில் உள்ள பெட்டிக்கும் தீ பரவியது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 2 பெட்டிகள் சேதம் அடைந்தன.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.