Published:Updated:

கோவை வணிக வளாகத்தில் தீ: 4 பேர் பலி (படங்கள்)

கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)
கோவை வணிக வளாகத்தில் தீ: 4 பேர் பலி (படங்கள்)

கோவை: கோவை, லட்சுமி மில்ஸ் அருகே வணிக வளாகத்தில் அமைந்துள்ள தனியார் வங்கியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் இறந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)
கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)

கோவை லட்சுமி மில்ஸ் அருகே வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தின் தரை தளத்தில் பிரபல தனியார் வங்கி இயங்கி வந்தது.
 

கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)

3வது தளத்தில் தனியார் இன்சூரன்ஸ், பத்திரிக்கை நிறுவனமும் செயல்பட்டு வந்தது. மேலும் பல அலுவலகங்கள் இந்த வணிக வளாகத்தில் இயங்கி வருகின்றன.

கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)
கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)

இந்த நிலையில், 3வது தளத்தில் இன்று காலை 10 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியது. காலை 10 மணிக்கு மேல் என்பதால் ஏராளமானோர் வணிக வளாகத்துக்குள் இருந்தனர். பலர் தீயில் சிக்கினார்.

கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)

இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் இருந்த அனைத்து தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 

கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)

மேலும் தீ விபத்தில் சிக்கியவர்களை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 

கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)

இருப்பினும் தீ விபத்தில் 4 பேர் சிக்கினர். இவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)

தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின்னரே விபத்து பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)
கோவை வணிக வளாகத்தில்  தீ: 4 பேர் பலி (படங்கள்)

தொடர்ந்து தீயணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ச.ஜெ.ரவி

படங்கள்: விஜய்