Published:Updated:

ஒடிசாவில் டிராக்டர் கவிழ்ந்து 25 பேர் பலி

ஒடிசாவில் டிராக்டர் கவிழ்ந்து 25 பேர் பலி
ஒடிசாவில் டிராக்டர் கவிழ்ந்து 25 பேர் பலி

ஒடிசா மாநிலத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாயினர். 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

##~~##
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் ஹிரான்பாடு கிராமத்திலிருந்து 60 பேர் செரிகுமாவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு டிராக்டர் ஒன்றில் சென்றனர். பின்னர் அனைவரும் தங்கள் ஊருக்கு அதே டிராக்டரில் திரும்பியுள்ளனர்.
அப்போது உப்பார் அன்சால் பாரி - ஹடகுமாவுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது டிராக்டரின் முன் சக்கரங்கள் தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், டிராக்டரில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 25 பேர் இறந்துள்ளனர். 35 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் ராயகடா தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சேவையை வழங்க மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.