Published:Updated:

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி! (படங்கள்)

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி! (படங்கள்)
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி! (படங்கள்)

சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி! (படங்கள்)

சிவகாசி அருகே நாராயணபுரத்தில் ரத்னா பயர் ஒர்க்ஸ் ஆலை இயங்கி வருகிறது. தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜயகுமாருக்கு சொந்தமான இந்த ஆலையில் 20க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி! (படங்கள்)

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இங்கு விதிமுறைகளை மீறி ரத்னா பயர் ஒர்க்ஸ் ஆலையில் இன்று காலை 10 மணிக்கு பட்டாசு தயாரிக்கும் பணி நடந்தது.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 3 பேர் பலி! (படங்கள்)

அப்போது, வானத்திற்கு போய் கலர் கலராக வெடிக்கும் பேன்சி ரக பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருளான மணி மருந்து என்னும் அபாயகரமான மருந்து கலவை தயாரிக்கும் பணியில் சிவகாசியை சேர்ந்த செல்லையா, கனி, மாரிமுத்து ஆகிய மூன்று பேர் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஏற்பட்ட உராய்வில் மணி மருந்து வெடித்து தீப்பிடித்தது. இதில் செல்லையா, கனி, மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

##~~##
இதன் அருகே பட்டாசுகளை காயவைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மதுரைவீரன், தங்கப்பாண்டியன், நடராஜன், பால்பாண்டி, கருப்பசாமி, முருகன், பவுல் ஆகிய 7 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
இறந்த மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்