Published:Updated:

ஒடிசாவில் 30 அடி உயரத்திலிருந்து விழுந்த பேருந்து - 7 பேர் உயிரிழந்த சோகம்

ஒடிசாவில் 30 அடி உயரத்திலிருந்து விழுந்த பேருந்து - 7 பேர் உயிரிழந்த சோகம்
ஒடிசாவில் 30 அடி உயரத்திலிருந்து விழுந்த பேருந்து - 7 பேர் உயிரிழந்த சோகம்

ஒடிசா மாநிலம் மகாநதி பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தவறி விழுந்ததில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒடிசா மாநிலம் சந்திக்ஹோல் என்ற பகுதியிலிருந்து கட்டாக் நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தது. சுமார் 30-க்கும் அதிகமான பயணிகள் அந்தப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர். ஜகத்பூர் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.  அப்பகுதியாக வந்த மாடு ஒன்றின் மீது மோதிய பேருந்து, பாலத்திலிருந்து தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மகாநதி ஆற்றில் விழுந்தது.  இந்தக் கோரவிபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இருள்சூழ்ந்த பகுதி என்பதால் பயணிகளை மீட்பதில் சிக்கல் நிலவி வருகிறது. தீயணைப்புவீரர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், ``மகாநதி பாலத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்துக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மீட்புப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன'' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.