Published:Updated:

8 பேரை பலி காவு வாங்கிய பட்டாசு ஆலை உரிமையாளரின் ஜாமீன் மனு நாளை விசாரணை

8 பேரை பலி காவு வாங்கிய பட்டாசு ஆலை உரிமையாளரின் ஜாமீன் மனு நாளை விசாரணை
8 பேரை பலி காவு வாங்கிய பட்டாசு ஆலை உரிமையாளரின் ஜாமீன் மனு நாளை விசாரணை

விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள நாராயணபுரத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியான வழக்கில் ஆலை உரிமையாளர் ஜாமீன் மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.

தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்க (டான்பாமா) தலைவரான விஜயகுமாருக்கு, சிவகாசி அருகே உள்ள நாராயணபுரத்தில் ரத்னா பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை உள்ளது.

இங்கு கடந்த கடந்த 28ஆம் தேதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை, பேன்சி ரக வெடிகளுக்கான மணி மருந்து தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் செல்லையா, மாரிமுத்து, கனி, பவுனு உள்ளிட்ட 8 பேர் பரிதாபமாக பலியாகினர். உடனே சிவகாசி கிழக்கு போலீசார், அஜாக்கிரதையாக இருந்ததால் விபத்து ஏற்படுத்துதல் (304) மற்றும் வெடி பொருள் சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் பட்டாசு ஆலை உரிமையாளர் விஜயகுமார், போர்மென் வேல்முருகன், மேனேஜர் சந்திரசேகரன், கேஷியர் மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

##~~##
இதனால் தலைமறைவான விஜயகுமாரை தவிர மற்ற 3 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் தலைமறைவான விஜயகுமார் ஸ்ரீவில்லிப்புத்தூர் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி ஜாமீன் கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரனையை நாளைக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.