Published:Updated:

உயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா?

உயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா?
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா?

உயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா?

‘பயண நேரத்தைக் குறைக்கிறது... பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்கிறது’ என்று தேசிய நெடுஞ்சாலைகளின் பயன்கள் பட்டியலிடப்படும் நிலையில், விழுப்புரம் நகரத்தின் நுழைவுவாயிலான எல்லீஸ் சத்திரம் கூட்டு ரோட்டில் விபத்துகள் ஏற்படுவது அன்றாட நிகழ்வாக மாறியிருக்கிறது. இந்த இடத்தில், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 100 பேர் விபத்துகளில் பலியாகியிருப்பதாகக் கவலையுடன் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

உயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா?

எல்லீஸ் சத்திரம் கூட்டு ரோட்டில், விபத்துகளைத் தவிர்க்கும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று இப்பகுதியைச் சேர்ந்த 30 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாகப் போராடி வருகிறார்கள். விழுப்புரம் மாவட்டக் கலெக்டர், தொகுதி எம்.பி., எம்.எல்.ஏ., தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில தேசிய நெடுஞ்சாலைத் துறை என பல தரப்பினருக்கும் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர் மக்கள். ஆனால், எந்தப் பயனும் இல்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு சாலைமறியலும் செய்து, விழுப்புரம் எம்.பி ராஜேந்திரனிடம் கோரிக்கை மனுவையும் கொடுத்தனர். அந்த மனுவை, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் அளித்ததுடன், இதுபற்றி நாடாளுமன்றத்திலும்  அவர் பேசியுள்ளார். அதன் பிறகும், எந்த நடவடிக்கையும் இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
உயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா?

எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்னியூர் சிவா என்பவர் பொதுநல மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், “விழுப்புரம் கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம், டி.ஐ.ஜி அலுவலகம், மாவட்ட எஸ்.பி அலுவலகம் என மாவட்ட ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் வளாகத்துக்கு வரும் பொதுமக்கள், எல்லீஸ் சத்திரம் சந்திப்பு வழியாகத்தான் சென்றாக வேண்டும். ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகத்துக்கு டூவீலர், கார், வேன், ஆட்டோ போன்ற வாகனங்களில் தினசரி சுமார் இரண்டாயிரம் பேர் வந்துசெல்கிறார்கள். அரசு அதிகாரிகளும் இந்த வழியாகத்தான் செல்கிறார்கள். இங்கு மேம்பாலம் இல்லாததால், தினசரி விபத்துக்கள் நிகழ்கின்றன. அப்பாவி மக்கள் உயிரிழக்கிறார்கள். உயிர் பலி ஏற்படுவதைத் தடுக்க, இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைக்கவும் போக்குவரத்து சிக்னல் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், அந்த இடத்தில் மேம்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும், தற்காலிக சிக்னல் அமைப்பது பற்றியும், இதுவரை அந்தப் பகுதியில் எத்தனை விபத்துகள் நிகழ்ந்துள்ளன... எத்தனை பேர் இறந்துள்ளார்கள்... அங்கு விபத்து ஏற்பட காரணம் என்ன உள்ளிட்ட தகவல்களை இரு வாரங்களுக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம், விழுப்புரம் கலெக்டர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றமே மக்களின் கடைசி நம்பிக்கை.

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படங்கள்: தே.சிலம்பரசன்