Published:Updated:

புத்தாண்டில் அதிகமான உற்சாகம்! - ஒரே இரவில் 7 பேர் உயிரிழப்பு

புத்தாண்டில் அதிகமான உற்சாகம்! - ஒரே இரவில் 7 பேர் உயிரிழப்பு
புத்தாண்டில் அதிகமான உற்சாகம்! - ஒரே இரவில் 7 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தினால், சென்னையில் மட்டும் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புத்தாண்டில் அதிகமான உற்சாகம்! - ஒரே இரவில் 7 பேர் உயிரிழப்பு

புத்தாண்டு என்றால், புதிய நாள்கள் மட்டும் பிறக்கவில்லை, அன்றைய இரவில் அலங்கரிக்கப்பட்ட புது உலகமும் பிறக்கிறது. அனைத்து நாட்டு மக்களும் மதங்களை மறந்து வெகு விமரிசையாகக் கொண்டாடும் ஒரே பண்டிகை, ஆங்கிலப் புத்தாண்டு மட்டுமே. புதிய வருடத்தை வரவேற்பதற்காகவும், புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்காகவும், அனைத்து நாட்டு மக்களும் சந்தோஷமாகப் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. புத்தாண்டு பிறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னரே நமது நாட்டு மக்கள் கொண்டாடத் தயாராகிவிடுகிறார்கள். இது, உண்மையில் நல்ல விஷயமே. ஆனால், அந்தக் கொண்டாட்டம்  இன்றைய இளைஞர்களால் பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. 

புத்தாண்டில் அதிகமான உற்சாகம்! - ஒரே இரவில் 7 பேர் உயிரிழப்பு

புத்தாண்டுக் கொண்டாட்டம் என்பது வண்ண வண்ண வானவேடிக்கைகள், பளிச்சிடும் மின்விளக்குகள், ‘மக்களின் ஹேப்பி நியூ இயர்’ முழக்கங்கள் என்பதையும் மீறி, ‘டூவீலர்களின் சாகசங்கள் இருந்தால்தான் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முழுமையடைகிறது’ என்ற நிலை சென்னையில் மட்டுமல்ல, அனைத்து பெரு நகரங்களிலுமே இருக்கின்றன. தார்ச் சாலையில் நெருப்பு பறக்க... பைக் ஸ்டாண்டுகளை உரசியவாறு, விண்ணைக் கிழிக்கும் சைலன்சர் சத்தத்துடன் 1,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மது போதையில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செல்கின்றனர். இதனால் சில சமயம் பெரும் விபத்து ஏற்படுகிறது.

புத்தாண்டில் அதிகமான உற்சாகம்! - ஒரே இரவில் 7 பேர் உயிரிழப்பு

வேகமாகச் செல்லும் இளைஞர்களால், அவர்கள் மட்டுமல்லாது எதிரில் அமைதியாக வரும் மற்றொருவரின் வாழ்க்கையும் பாதிப்படைகிறது. நேற்றிரவு சென்னையில் நடந்த கொண்டாட்டத்தில் மட்டும் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில், சென்னையின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும், பல இடங்களில் சிசிடிவி கேமராக்களும் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இருந்தும் சில விபத்துகளைத் தவிர்க்க முடியவில்லை. இது மட்டுமல்லாது,  50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.