Published:Updated:

பள்ளத்தாக்கில் விழுந்த பள்ளி வாகனம்! - 6 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஓட்டுநரின் அலட்சியம்

பள்ளத்தாக்கில் விழுந்த பள்ளி வாகனம்! - 6 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஓட்டுநரின் அலட்சியம்
பள்ளத்தாக்கில் விழுந்த பள்ளி வாகனம்! - 6 குழந்தைகளின் உயிரைப் பறித்த ஓட்டுநரின் அலட்சியம்

ஹிமாச்சல பிரதேசத்தில், பள்ளிப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஆறு குழந்தைகள் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிர்மாவூர் மாவட்டம், சங்ராஹ் பகுதியில் உள்ள தேவ் பப்ளிக் பள்ளியில் குழந்தைகளுக்காகத் தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த மாவட்டம், தலைநகர் சிம்லாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ளது.

இன்று காலை வழக்கம்போல பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வாகனம் செல்லும்போது சிர்மாவூர் பகுதியில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பள்ளத்தாக்கில் பாய்ந்தது. இந்தக் கோர விபத்தில் 6 குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டுநர் என 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 12 குழந்தைகள் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து ஓட்டுநரின் அலட்சியத்தால் மட்டுமே நிகழ்ந்துள்ளதாகக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் சமீர் (5) அதார்ஸ் (7) கார்த்திக் (14) அமிஷேக், சஞ்சனா, நைட்டிக் சௌதான் ஆகிய குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.