Published:Updated:

வெடித்து சிதறிய பெட்ரோல் குழாய்; உடலில் நெருப்புடன் ஓடிய மக்கள் - மெக்ஸிகோவில் நிகழ்ந்த கோர விபத்து#video

மெக்ஸிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹிடல்கோ என்ற நகரில் கடந்த வெள்ளிக் கிழமையன்று பெட்ரோல் கொண்டு செல்லும் குழாயில் விரிசல் ஏற்பட்டு பெட்ரோல் கசிய தொடங்கியுள்ளது. இந்த செய்தி அப்பகுதி கிராம மக்களுக்கு தெரிந்துள்ளது. அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் கைகளில் கிடைத்த பாத்திரங்களுடன் சென்று குழாயில் கசிந்த பெட்ரோலை பிடித்துக்கொண்டு இருந்துள்ளனர். 

வெடித்து சிதறிய பெட்ரோல் குழாய்; உடலில் நெருப்புடன் ஓடிய மக்கள் - மெக்ஸிகோவில் நிகழ்ந்த கோர விபத்து#video

அப்போது பெரும் சத்தத்துடன் பெட்ரோல் குழாய் வெடித்துச் சிதறியது. இதில் அருகில் இருந்த மக்களும் தூக்கி வீசப்பட்டனர். பலர் தங்களின் உடல்களில் நெருப்புடன் நீண்ட தூரம் ஓடி வந்து அணைத்தனர்.  இந்த அதி பயங்கர காட்சிகளை அங்குள்ளவர்கள் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ உலகளவில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த கோர விபத்தில் தற்போது வரை 73 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக ஹிடல்கோ நகர ஆளுநர் ஒமர் ஃபயட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.  மேலும் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

வெடித்து சிதறிய பெட்ரோல் குழாய்; உடலில் நெருப்புடன் ஓடிய மக்கள் - மெக்ஸிகோவில் நிகழ்ந்த கோர விபத்து#video

மெக்ஸிக்கோவில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பெட்ரோல் கொண்டு செல்ல அதிகமாக இது போன்ற பெரிய குழாய்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சில சமூக விரோதிகள்  குழாய்களில் துளையிட்டு பெட்ரோலை திருடி அதை விற்றுவரும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த விபத்து துளையிட்டு திருடும் போது நிகழ்ந்ததா? அல்லது குழாயில் தானாக ஏற்பட்ட விரிசலா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.