முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயத்தின் மகன் உட்பட 4 பேர் கார் விபத்தில் பலி.

பெரம்பலூர்: மைலாப்பூர் தொகுதி தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராமஜெயம். இவரின் மகன் செந்தில், உறவுகாரர்கள் 8 பேருடன் ஸ்கார்பியோ காரில் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றனர். நேற்று காலை சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து காரில் இரவு சென்னை திரும்பினார்கள்.
காரை டிரைவர் சீனிவாசன் என்பவர் ஓட்டிவர பின்னால் இருந்த குழந்தைகளும் பெண்களும் ஆழ்ந்து தூங்கி கொண்டு வந்திருந்திருக்கிறார்கள். கார் இன்று அதிகாலை 4 மணிளவில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரை அடுத்த விஜய கோபாலபுரம் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து. கார் கவிழ்ந்ததும் காருக்குள் இருந்த அனைவரும் கூச்சல் போடவே அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர்.
இந்த கோர விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமஜெயத்தின் மகன் செந்தில், அவரது உறவினர் சென்னை அயனாவரத்தை சேர்ந்த லோகநாதன், அவரது மனைவி ரேணு லட்சுமி, விழுப்புரம் மாவட்டம் ஏமாப்பூரை சேர்ந்த தலைமை காவலர் ரமேஷ் ஆகிய 4 பேரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
##~~## |