Published:Updated:

பிரேசிலின் பெருந்துயர்! - அணை உடைந்த விபத்தில் 40 பேர் பலி; 300 பேர் மாயம்

பிரேசிலின் பெருந்துயர்! - அணை உடைந்த விபத்தில் 40 பேர் பலி; 300 பேர் மாயம்
News
பிரேசிலின் பெருந்துயர்! - அணை உடைந்த விபத்தில் 40 பேர் பலி; 300 பேர் மாயம்

பிரேசிலின் பெருந்துயர்! - அணை உடைந்த விபத்தில் 40 பேர் பலி; 300 பேர் மாயம்

பிரேசிலின் தென்கிழக்குப் பகுதியில் Brumadinho பகுதியில் இரும்புச் சுரங்கம் உள்ளது. இதன் அருகே அமைந்த அணை உடைந்ததால் சுரங்க சகதியுடன் வெள்ளம் அடித்துச் செல்லப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த வெள்ளியன்று மதியம் அணை அருகிலிருந்த உணவகத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் உணவருந்திக்கொண்டிருந்தனர். அப்போது தொடங்கிய சகதிப் பெருக்கு அந்த உணவகம் தொடங்கி, கால்நடைகள், வாகனங்கள், குடியிருப்புகள் என அனைத்தையும் மூழ்கடித்துள்ளது. விமானப்படையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். ஆனால், இரண்டு நாள்களாகியும் இதுவரை சகதியின் பெருக்குக் குறையாமல், மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், ஒரு இடத்தைப் பற்றிய நிலவரத்தை அறிவதுகூட பெரிய சவாலாக உள்ளது. 

`மரங்களையெல்லாம் பிடுங்கிக் கொண்டு கொடூர சத்தத்துடன் வருவதைப்பார்த்து பயந்தேன். இதுதான் என் வாழ்க்கையின் முடிவு என்று நினைத்தேன். திசை தெரியாமல் என்னையும் அறியாமல் இயங்கினேன். இன்னும் அந்த வெள்ளத்தின் சத்தம் என்னைவிட்டு நீங்காமல் அச்சுறுத்திக்கொண்டுள்ளது’ என்கிறார் 45 வயது பெண்மணி பெட்ரோஸா. இது பிரேசிலின் பேரழிவு என்று Minas Gerais மாகாணத்தின் ஆளுநர் ரோமியோ ஜிமா கூறியிருக்கும் நிலையில், இந்த விபத்தை பிரேசிலின் `பெருந்துயர்’ என்று அதிபர் ஜயீர் போலசனாரு கவலை தெரிவித்திருக்கிறார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உள்ளூர் தீயணைப்புத் துறையினர் தகவலின்படி, இதுவரை 40 பேர் பலியாகியுள்ளதாகவும், தொழிலாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் உள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. `வேல்' என்ற சுரங்க நிறுவனத்தால் 1976-ம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு இந்நிறுவனத்தால் இதே மாகாணத்தில் கட்டப்பட்ட அணை உடைந்தது. அதில் 19 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அணை உடைந்ததற்கு வேல் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. மேலும், மாகாண அரசும் மத்திய அரசும் பல அபராதங்களை நிறுவனத்தின் மீது விதித்துள்ளது. அதில் குறிப்பாக, 1.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள வேல் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்நிதி பாதிக்கப்பட்ட மக்களிடம் போய்ச் சேரும் என அரசு கூறியுள்ளது.