Published:Updated:

நெய்வேலி சுரங்க நீரில் தவறி விழுந்து என்.எல்.சி அதிகாரி உயிரிழப்பு!

நெய்வேலி சுரங்க நீரில் தவறி விழுந்து என்.எல்.சி அதிகாரி உயிரிழப்பு!
நெய்வேலி சுரங்க நீரில் தவறி விழுந்து என்.எல்.சி அதிகாரி உயிரிழப்பு!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணியில் இருந்த துணை பொது மேலாளர் சுரங்கத்தில் தேங்கி இருந்த தண்ணீரில்
தவறி விழுந்து உயிரிழந்தார்.

நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் துணை பொது மேலாளராகப் பணிபுரிந்து வந்தவர் ராஜலிங்கம் (59). இவர் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் முதல் சுரங்க விரிவாக்கத்தில் துணை பொது மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். இன்று ராஜலிங்கம் நிலக்கரி சுரங்கத்தில் பணியில் இருந்தபோது மோட்டார் மூலம் நிலக்கரி சுரங்கத்தில் குட்டைபோல் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்ணீரை வெளியேற்றிய மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டுள்ளது. அங்கு பணியில் இருந்த என்.எல்.சி ஊழியர்கள் மோட்டாரில் ஏற்பட்ட கோளாறைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ராஜலிங்கம் அருகில் இருந்து மேற்பார்வை பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது, அவர் எதிர்பாராதவிதமாக சுரங்கத் தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் என்.எல்.சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  ராஜலிங்கத்தை கரையேற்றி, என்.எல்.சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த
டாக்டர்கள் அவர் ஏற்கெனவே உயிழந்ததாகக் கூறியுள்ளனர். இதையடுத்து ராஜலிங்கத்தின் உடன் என்.எல்.சி பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.