Published:Updated:

சென்னை - மங்களூர் ரயில் சொர்னூரில் தடம்புரண்டது! - ரயில்கள் பாதியில் நிறுத்தம்

சென்னை - மங்களூர் ரயில் சொர்னூரில் தடம்புரண்டது! - ரயில்கள் பாதியில் நிறுத்தம்
சென்னை - மங்களூர் ரயில் சொர்னூரில் தடம்புரண்டது! - ரயில்கள் பாதியில் நிறுத்தம்

சென்னையிலிருந்து மங்களூர் நோக்கிச் சென்ற சூப்பர் பாஸ்ட் மெயில் கேரள மாநிலம் சொர்னூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது.

சென்னை - மங்களூர் ரயில் சொர்னூரில் தடம்புரண்டது! - ரயில்கள் பாதியில் நிறுத்தம்

சென்னையிலிருந்து மங்களூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சூப்பர் பாஸ்ட் மெயில் (12601) இன்று காலை 6.30 மணிக்கு கேரள மாநிலம் சொர்னூர் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டது. பாலக்காட்டிலிருந்து சொர்னூர் ரயில் நிலையத்திற்குள் நுழையும் சமயத்தில் ரயில் எஞ்சினின் பின்புறம் உள்ள இரண்டு பெட்டிகள் திடீரெனத் தடம்புரண்டன. ரயில் தடம்புரண்டதில் அப்பகுதியில் உள்ள மின்கம்பங்கள் உடைந்தன. பார்சல் பெட்டி மற்றும் எஸ்.எல்.ஆர். பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சொர்னூரிலிருந்து திருச்சூர், கோழிக்கோடு பகுதிகளுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை - மங்களூர் ரயில் சொர்னூரில் தடம்புரண்டது! - ரயில்கள் பாதியில் நிறுத்தம்

பல ரயில்கள் பாதியில் நிறுத்தப்பட்டன. சொர்னூரிலிருந்து கோவைக்கு இன்று காலை புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் பயணிகள் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாகும் எனக் கூறப்படுகிறது. சொர்னூர் ரயில் நிலையத்தில் தேவையான தளவாடங்கள் உள்ளதால் தடம்புரண்ட ரயிலை விரைவில் மீட்டு ரயில் போக்குவரத்து சீர் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.