Published:Updated:

`வனவிலங்குகளுக்குப் பாதிப்பில்லை; 95 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்!’ - முதுமலை காட்டுத் தீ குறித்து வனத்துறை

`வனவிலங்குகளுக்குப் பாதிப்பில்லை; 95 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்!’ - முதுமலை காட்டுத் தீ குறித்து வனத்துறை
`வனவிலங்குகளுக்குப் பாதிப்பில்லை; 95 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்!’ - முதுமலை காட்டுத் தீ குறித்து வனத்துறை

முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார் 95 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதிகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

`வனவிலங்குகளுக்குப் பாதிப்பில்லை; 95 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்!’ - முதுமலை காட்டுத் தீ குறித்து வனத்துறை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த மாதம் 23-ம் தேதி முதுமலை புலிகள் காப்பக எல்லையோரத்தில் அமைந்துள்ள கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பக வனத்தில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ முதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள்ளும் பரவியது. தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநில எல்லையோர (டிரை ஜங்சன்) வனத்தில் தீ எரிந்தது. இதை வனத்துறையினர் கவுண்டர் பயர் முறையில் தீயை அணைத்தனர்.

உள் மண்டலப் பகுதியில் லேண்டானா, பார்த்தீனியம் போன்ற களைச் செடிகள் மற்றும் புல்வெளிகள் எனச் சுமார் 25 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதி எரிந்து சேதமடைந்தது. வனத்துறையினர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதேபோல் முதுமலை வெளி மண்டலப் பகுதிக்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், ஆச்சக்கரை, சிங்காரா, மாவனல்லா, மன்றாடியார், குரும்பர்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மர்மநபர்கள் வனத்துக்குத் தீ வைத்தனர். இதில் சுமார் 70 ஹெக்டர் பரப்பளவிலான புல்வெளிகள் எாிந்து நாசமானது. முதுமலையில் காட்டுத்தீ முழுமையாகக் கட்டுப்படுத்திய நிலையில், தற்போது கோடைக்காலம் என்பதால் யானை, புலி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். வனப்பகுதிகளில் உள்ள குட்டைகள், தொட்டிகளில் நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. 

`வனவிலங்குகளுக்குப் பாதிப்பில்லை; 95 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்!’ - முதுமலை காட்டுத் தீ குறித்து வனத்துறை

இதுகுறித்து உள்மண்டல துணை இயக்குநர் செண்பகப்பிரியா கூறுகையில்,``பந்திப்பூரிலிருந்து முதுமலைக்குள்ளும் காட்டுத்தீ பரவியது. காட்டுத்தீ ஏற்பட்டவுடன் புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் இடம் பெயர்ந்து சென்றுவிட்டன. இதனால் வனவிலங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.  உள் மண்டலத்தில் 25 ஹெக்டர் பரப்பளவிலான வனங்கள் எரிந்துள்ளது. கவுண்டர் பயர் முறையில் தீ அணைக்கப்பட்டது.

ஓம்பெட்டா, கேம்ஹட் ஏரி மற்றும் மாயாற்றிலும் போதிய நீர் உள்ளது. குட்டைகள், தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. முதுமலை வெளிமண்டலத்தில் சுமார் 70 ஹெக்டர் பரப்பளவிலான புல்வெளிகள்  எரிந்து நாசமானது. சீகூர், சிங்காரா, மசினகுடி ஆகிய வனச்சரகங்களில் வனப்பகுதிகளில் உள்ள இயற்கை குட்டைகள் மற்றும் தொட்டிகளில் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. இவற்றை வன விலங்குகள் அருந்துகிறதா, தொட்டிகளில் தண்ணீர் உள்ளதா என்பது குறித்து வன ஊழியர்கள் பார்வையிட்டு உடனுக்குடன் தண்ணீர் நிரப்படுகிறது’’ என்றார்.