Published:Updated:

ஒரு குழந்தையை மீட்டார்; கண்முன்னே மனைவி, பிள்ளைகள் கருகினர்! - சாலையில் நின்று கதறிய தந்தை

ஒரு குழந்தையை மீட்டார்; கண்முன்னே மனைவி, பிள்ளைகள் கருகினர்! - சாலையில் நின்று கதறிய தந்தை
ஒரு குழந்தையை மீட்டார்; கண்முன்னே மனைவி, பிள்ளைகள் கருகினர்! - சாலையில் நின்று கதறிய தந்தை

டெல்லியில் உள்ள அக்‌ஷர்தம் மேம்பாலத்தின் மீது ஒரு கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.  

ஒரு குழந்தையை மீட்டார்; கண்முன்னே மனைவி, பிள்ளைகள் கருகினர்! - சாலையில் நின்று கதறிய தந்தை

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் நேற்று மாலை அக்‌ஷர்தம் (Akshardham) என்ற கோயிலுக்குத் தங்கள் காரில் சென்றுகொண்டிருந்தனர். சரியாக மாலை 6.30 மணிக்கு கார் அக்‌ஷர்தம் மேம்பாலத்தின் மீது சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் பின்புறம் தீப்பிடித்து எரியத்தொடங்கியுள்ளது. பின்னர் காரை ஓட்டிவந்த உபேந்திர மிஸ்ரா உடனடியாகக் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு முன் இருக்கையில் அமர்ந்திருந்த தன் குழந்தையுடன் வெளியேறிவிட்டார். இந்த விபத்தில் மிஷ்ராவின் மனைவி ரஞ்சனா மற்றும் ரிதி, நிக்கி என்ற இரு குழந்தைகளும் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

ஒரு குழந்தையை மீட்டார்; கண்முன்னே மனைவி, பிள்ளைகள் கருகினர்! - சாலையில் நின்று கதறிய தந்தை

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இதுபற்றிக் கூறும்போது, “அக்‌ஷர்தம் மேம்பாலத்தின் மீது கார் சென்றபோது அதன் பின்னால் கரும்புகை வந்ததை முதலில் நாங்கள் பார்த்தோம். பிறகு உடனடியாகப் பின்புறம் தீப்பிடித்தது. தன் குடும்பத்தைக் காப்பாற்ற அந்தத் தந்தை காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றார். அதற்குள் தீ காரின் பிற பகுதிகளுக்கும் பரவியது. உடனடியாகக் காரை சாலை ஓரத்தில் நிறுத்திய அவர் முன் இருக்கையில் இருந்த தன் ஒரு குழந்தையுடன் காரைவிட்டு வெளியேறினார். பிறகு, காரின் பின் கதவைத் திறக்க அவர் எவ்வளவோ முயற்சி செய்தார். இருந்தும் அது பலனளிக்கவில்லை. கொளுந்துவிட்டு எரிந்தத் தீயால் யாராலும் காரின் அருகில் செல்ல முடியவில்லை. கதவைத் திறக்க நாங்களும் முயற்சி செய்தோம். ஆனால், முடியவில்லை. கதவு திறக்க முடியாதவாறு பூட்டிக்கொண்டது.

ஒரு குழந்தையை மீட்டார்; கண்முன்னே மனைவி, பிள்ளைகள் கருகினர்! - சாலையில் நின்று கதறிய தந்தை

தன் கண் முன்னே மனைவி மற்றும் குழந்தைகள் உயிருடன் எரிவதைப் பார்த்த அவர் சாலையிலேயே கதறி அழுது துடிதுடித்துப் போனார். உதவி வேண்டும், உதவி வேண்டும் எனத் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தார். தீ விபத்தை அறிந்த அடுத்த சில நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் வந்து தீயை அணைத்தனர். பின்னர், காரின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உடல்கள் எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது’’ எனத் தெரிவித்துள்ளார்.

விபத்து குறித்துப் பேசிய காவல்துறையினர், `வண்டியில் இருந்த கேஸ் கசிந்ததால்தான் தீப்பற்றியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’ எனக் கூறினர்.